மஞ்சள் செடிகளை தாக்கிய பச்சை புழுக்கள்: விவசாயிகள் கவலை!


ஓமலூரில் மஞ்சள் செடிகளை பச்சை புழுக்கள் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டார பகுதிகளில் 500 ஏக்கர்கள் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் செடிகளை
பயிரிட்டுள்ளனர். மஞ்சள் அறுவடை காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் பலரும் கிணற்று நீர்
பாசனத்திலும் மஞ்சள் பயிரை விவசாயம் செய்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் செடிகளை பச்சை புழுக்கள்
கடுமையாக தாக்கியுள்ளது. 

இதனால் மஞ்சள் செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வளர்ச்சி முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே மஞ்சள் சாகுபடியை சரியான
முறையில் கொண்டுவர முடியாது என்ற நிலையில், பச்சை புளுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள்
வேதனைப்படுகின்றனர். அத்துடன் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மஞ்சள் தோட்டங்களை ஆய்வுகள் செய்து, பச்சை புழுக்களின்
தாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS