சம்பா பயிர்களை நாசமாக்கும் புகையான் நோய்


சம்பா பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மிகுதியாக பெய்ததால், நிலத்தடி மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அங்கு லட்சக்கணக்கான ஏக்கர்களில் சம்பா பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இதனால் கடந்த 10 நாட்களாக தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதாகவும், பனிப்பொழிவு அதிகரிப்பாலும் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். மழையால் பெருவாரியான பயிர்கள் அழுகிய நிலையில், மீதமுள்ளவையும் தற்போது நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். உரிய நேரத்தில் உரம் கிடைக்காததாலேயே சம்பா பயிரை நோய் தாக்கியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

POST COMMENTS VIEW COMMENTS