ஏலக்காய் விலை அதிகரிப்பு


தேனி மாவட்டத்தில் ஏலக்காய் வரத்து அதிகரித்து சீசன் களைக்கட்டியுள்ளது. இதனால் வாரத்ததிற்கு 12லட்சம் கிலோ வரை ஏலக்காய் விற்பனை செய்யப்படுகிறது.  

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.50லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. ஏலக்காய் மகசூல் விலை என இரண்டுமே எப்போதும் நிலையாக இருந்தது இல்லை. மகசூல் பாதிப்பு ஏற்படும் அல்லது விலை கிடைக்காது. இந்தாண்டு கடந்த அக்டோபரில் துவங்கிய  ஏலக்காய் சீசனால் அதிக காய் வரத்து காணப்படுகிறது.ஒரு வாரத்திற்கு சராசரியாக 12லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு வருகிறது. சராசரியாக கிலோ 900 வரை விற்கப்படுகிறது. 

இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஏலக்காய் கடைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு ஏற்றுமதியும் அதிகமாகியுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS