பாக்கு மரங்களை சேதப்படுத்தும் குரங்குகள்


கோவையில் பாக்குவிளைச்சல் அதிகரித்தும் குரங்களின் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவையில் பாக்கு மரங்கள் விளைச்சல் பெருவாரியாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாக்கு மரங்கள் விளையும் பகுதி, வனத்தை ஒட்டிய பகுதி என்பதால், கூட்டம் கூட்டமாக குரங்குகள் தோட்டத்திற்குள் புகுந்து பாக்கு காய்களை பறித்து வீசுவதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். 

கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்தும் குரங்குகள் அவற்றை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 5 ஆண்டுகள் பராமரித்த பாக்குமரங்களை, அறுவடை நேரத்தில் குரங்குகள் சேதப்படுத்துவதால், அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை என்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததே இந்த பிரச்னைக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS