வாழைகளுக்கு குளிர்பதன கிடங்கு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


நாமக்கல்லில் வாழை சேமிப்பு குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர், ஒருவந்தூர், குமரிபாளையம், ராசிபாளையம், கிடாரம், பொய்யேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓராண்டு பயிரான வாழை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், ஒரு வாழைத்தார் 150 லிருந்து 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இதனால் செலவு செய்த தொகைக்கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். வாழைகளை சேமிக்க முடியாமல், அழுகும் நிலை ஏற்படுவதே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே வாழையை சேமித்து வைத்து விலை உயரும் போது விற்பதற்கு ஏதுவாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS