இந்திய விவசாயிகள் போராட்டம்: தள்ளுபடியாகுமா கடன்?


கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வீதியில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக கடன் தள்ளுபடியே உள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டு முறை டெல்லிக்கு சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. 

இந்நிலையில் இந்திய அளவிலான விவசாய சங்கங்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 150க்கும் அதிகமான விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முதன்முறையாக நாட்டின் அனைத்து விவசாயச் சங்கங்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், 500க்கும் அதிகமான விவசாயச் சங்கப் பெண் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இதையொட்டி 5 ஏக்கருக்கும் மேல் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய‌வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வீதியில் விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS