தடுப்பணை கட்ட 50ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கும் விவசாயிகள்


காஞ்சிபுரத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டக்கோரி 50 ஆண்டுகளாக காத்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

2015ஆம் ஆண்டு பெய்த மழை முழுவதும் தடுப்பணை இல்லாததால் வீணாக கடலில் கலந்ததாகவும் அதனால் இந்தாண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தடுப்பணை கட்டுவது குறித்து, பொதுப்பணித்துறையிடம் கேட்கும் போதெல்லாம் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருப்பதாகவும்,‌ஒப்புதலுக்காக காத்திருப்ப தாகவும் கூறுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பாலாற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணை கட்டக் கோரி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அரசு இம்முறையாவது இந்த கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS