கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை


ஒசூரில் கொத்தமல்லியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, புலியரசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ‌ஐந்தாயிரம் ஏக்கரில் கொத்தமல்லி தழையை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொத்தமல்லி கட்டு ஒன்றின் விலை அதிகபட்சமாக ரூ.50 வரை விற்கப்பட்டது. 
தொடர்ந்து பெய்த கனமழைக் காரணமாக வரத்து அதிகரித்ததால், கடந்த சில நாள்களாக கொத்தமல்லி கட்டின் விலை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நஷ்டத்திற்கு ஆளாகியிருப்பதாக‌ அப்பகுதி விவசாயி‌கள் கவலை தெரிவிக்கின்றனர்.‌


 

POST COMMENTS VIEW COMMENTS