வயலில் அழுகிய சின்ன வெங்காயம்: விவசாயிகள் கவலை


 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விளைவித்த சின்ன வெங்காயம் நிலத்திலேயே அழுகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த லேசான மழைக்கு பெரும்பாலான விவசாயிகள், சின்ன வெங்காயம் நடவு செய்திருந்தனர். அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் சின்னவெங்காயம் வயலோடு அழுகி விட்டது. இதையறிந்த விவசாயிகள் வெங்காயத்தை தற்போது வேகவேகமாக அறுவடை செய்து வருகின்றனர். இதனால், வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஓமலூர் வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ஒன்று 130 ரூபாயிலிருந்து ‌180 ரூபா‌யாக உயர்ந்துள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS