புதிய தலைமுறை ‌செய்தி எதிரொலி : கடலாழி ஆற்றை தூர்வாரினர்  


மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி பகுதியில் உள்ள கடலாழி ஆற்றை பொதுப்பணித்துறையினர் தூர் வாரினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அகரகீரங்குடி பகுதியில் உள்ள கடலாழி ஆறு, பல மாதங்களாக தூர்வாரப்பாடாமல் உள்ளதாக புகார் எழுந்தது. கடலாழி ஆறு தூர் வாரப்படாமல் இருப்பதால் பல கிராமங்களின் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகியது. இதன் எதிரொலியாக கடலாழி ஆறு பொதுப் பணித்துறையினரால் தற்காலிகமாகத் தூர்வாரப்பட்டது.  ஆற்றை நிரந்தரமாக தூர்வார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

POST COMMENTS VIEW COMMENTS