விளிம்பிப் பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி


கொடைக்கானலில் ஸ்டார் ஃப்ரூட் என்றழைக்கப்படும் விளிம்பி பழம் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இப்பயிரை காபி பயிரின் ஊடு பயிராக விளைவித்து அதிக மகசூலை பெற முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ விளிம்பி பழம் 25 ரூபாய் விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது 40 வரை வெளிமாநில வியாபாரிகள் வாங்கி செல்வதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர்.

புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் விளிம்பிப் பழம் கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஒரு விளம்பிப் பழ மரத்தில் இருந்து வருடத்திற்கு 75 கிலோ முதல் 100 கிலோ வரையில் இரண்டு முறை பழங்கள் எடுக்கலாம்.
 

POST COMMENTS VIEW COMMENTS