அரியலூரில் வீணாகும் மழைநீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை


அரியலூர் மாவட்டம் மருதையாற்றில் வீணாகும் மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளிள் பெருக்கெடுத்து ஓடும் நீர், மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதற்கிடையே பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 3 வருடத்திற்கு பிறகு மருதையாற்றில் தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து செல்கிறது. ஆனால் இந்த மழைநீர் முழுவதும் சேமிக்கப்படாமல் கடலில் கலந்து வருகிறது. எனவே மழை நீரை சேமிக்கும் வகையில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது மழைநீர் முழுவதும் வீணாகக் கடலில் கலப்பதால் விவசாயித்திற்கு தேவையான நீர் இல்லா நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS