அறுவடை நேரத்தில் இலைக்கருகல் நோய்: விவசாயிகள் வருத்தம்


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதிகளில் நெற்பயிர்களில் இலைக்கருகல் நோய் தாக்கியுள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

களியனூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மஞ்சள் நிறத்தில் இலைக்கருகல் நோய் தாக்கியுள்ளதால், சுமார் 175 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறைகள் குறித்து தெரிவித்துள்ளதாகக் கூறினர்.

POST COMMENTS VIEW COMMENTS