வாழை இலை‌ விலை வீழ்ச்சி: விவசாயிகள் வருத்தம்


வாழை இலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் திண்டுக்கல் அருகே ஆவார‌ம்பட்டி கிராம விவசாயிகள் வருத்தம்‌‌ தெரிவிக்கின்றனர். 
இப்பகுதிகளில் அதிகளவு வாழை விவசாயம் செய்யப்ப‌ட்டு வரும் நிலையில்,‌ முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். வழக்கமாக ஒரு கட்டு வாழை இலை‌‌ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையா‌ன நிலையி‌ல், தற்போது‌ 500 ரூபாய் வரையே ‌விற்பதால் கூலிக்குக்‌கூட கட்டுப்படியாகாத‌ நிலை ‌இருப்பதா‌க கவலை தெரிவிக்கின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS