கரும்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.230: மத்திய அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல்


வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் பயிர் ஆண்டில் கரும்புக்கான ஆதார விலையை தொடர்ந்து குவிண்டாலுக்கு 230 ரூபாயாக நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தொலைத்தொடர்பு அலைக்கற்றைகள் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தவிர பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொள்முதல் முடிவை சுதந்தரமாக எடுத்துக்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS