விவசாயிகளை சிங்கப்பூருக்கு அனுப்பும் ஆந்திர அரசு!


123 விவசாயிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது, ஆந்திர மாநில அரசு.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த பிறகு, அமராவதியில் புதிய தலைநகரம் கட்டப்பட்டு வருகிறது. மாடர்ன் நகராக கட்டப்பட இருக்கும் இந்த நகருக்காக அந்தப் பகுதியை சேர்ந்த 25 ஆயிரம் விவசாயிகள், 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். நிலம் கொடுத்த விவசாயிகளில் 123 பேரை தேர்வு செய்து ஆந்திர அரசு சிங்கப்பூருக்கு அனுப்புகிறது. 

இது இலவச டிரிப் இல்லை. சிங்கப்பூர் செல்ல முன் வரும் விவசாயிகள் ரூ. 25 ஆயிரம் கொடுக்க வேண்டும். பாக்கியை ஆந்திர அரசு பார்த்துக்கொள்ளும். இந்த நான்கு நாள் டூருக்கு மூன்று கட்டங்களாக விவசாயிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், விவசாயிகள் அந்நாட்டின் வணிக நடைமுறைகளை கற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS