‌வெம்பா பனிப்பொழிவால் பாதிப்பு: சம்பங்கி மலர் விளைச்சல் குறைந்தது


விருதுநகர் மாவட்டம் மீசலூர் பகுதியில், வெம்பா பனிப்பொழிவால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பங்கி மலர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றிற்கு 20 முதல் 25 கிலோ வரையில் கிடைத்து வந்த சம்பங்கி மலர்களின் விளைச்சல், வெம்பா பனிப்பொழிவால், 3 கிலோவாக குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பங்கி மலர்களுக்கு சற்று ஆறுதலான விலை கிடைத்தாலும், வெம்பா பனிப்பொழிவு முடிந்தால் மட்டுமே, மலர் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS