காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பயிர்கள்


குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவாட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சுமார் 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலைச் செடிகள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் நெல் பயிர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS