கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய தொகையை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசு கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள வாசன், விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு பொங்கலுக்கு முன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS