தினகரன் ஆதரவாளர்களும் எங்களோடு இணைவார்கள்: செல்லூர் ராஜூ


அதிமுகவின் இருஅணிகள் இணைந்தது போல், விரைவில் தினகரன் ஆதரவாளர்களும் தங்களுடன் இணைவார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை இணைக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். எதிர்த்து சென்றவர்களே வந்து இணைந்து விட்டார்கள். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏற்கெனவே ஆதரித்து வந்தவர்கள்தான். அதனால் விரைவில் வந்து இணைந்து விடுவார்கள். ஊடகங்கள் அதிமுகவை ஒன்று சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் தேவையில்லாமல் அடுத்தவர்கள் வளர வழி செய்யக்கூடாது’ எனத் தெரிவித்தார். 

POST COMMENTS VIEW COMMENTS