வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


வெங்காயம் விலை உயர்வால் தேனி மாவட்டம் போடி அருகே வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 10 கிலோ வெங்காய சிப்பம் 800 ரூபாய் வரை விற்பதாலும், கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை‌ சீராக உள்ளதாலும், வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS