மணத்தக்காளியால் மகிழ்ச்சியடைந்த மேட்டூர் விவசாயிகள்


மேட்டூர் அருகே கோள்நாயக்கன்பட்டி கிராமத்தில் நிலத்தடிநீரை கொண்டு மணத்தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி வெயில் வாட்டிவததைத்து வரும் நிலையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அருகே உள்ள கோள்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ரெட்டியூர், சானவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 5௦-க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் மணத்தக்காளி கீரை பயிர் செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் அப்பகுதியில் எள்ளு, நிலக்கடலை, பருத்தி மஞ்சள், உள்ளிட்டவைகளை பயிர்செய்தனர். ஆனால் அந்த விவசாயத்தில் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலையில் மாற்று விவசாயமான மணத்தக்காளி கீரை விவசாயத்திற்கு மாறியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பயிர் 6௦ நாட்களில் அறுவடைக்கு வந்துவிடுகிறது. மேலும் ஒரு கட்டு கீரை 5 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடியதாக இது உள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS