தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய்விருந்து 


தமிழக விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக பழமையான ஒரு வழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் அமெரிக்கா வாழ் தமிழர்கள். 

மொய் விருந்து மூலமாக நன்கொடைகளைத் திரட்டி அதன் மூலமாக தமிழக விவசாயிகளுக்கு உதவ எய்ம்ஸ் அமைப்பு, வாஷிங்டன் தமிழ் சங்கம், தமிழ் பள்ளிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு வரும் 29-ஆம் தேதி சனிக்கிழமை சாண்ட்லி (CHANTILLY) பகுதியில் உள்ள ஃப்ரீடம் உயர்நிலைப் பள்ளியில் (FREEDOM HIGH SCHOOL) நடக்க இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை dcmoivirunthu.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS