செயற்கை ரசாயன சாயம் பூசப்படுவதாக வலைதள தகவலால் தர்பூசணி விற்பனை பாதிப்பு: விவசாயிகள் கவலை


தர்பூசணியில் செயற்கையாக ரசாயன சாயம் செலுத்தப்படுவதாக வலைதளங்களில் பரவிய தகவலால், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் சாலையோரத்தில் தர்பூசணி விற்பனையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சிலர் வியாபார நோக்கத்தில் தர்பூசணி பழத்தில் செயற்கை ரசாயன நிறங்கள் சேர்ப்பதால், அனைத்தும் அவ்வாறே இருப்பதாக வாடிக்கையாளர்கள் நினைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS