தக்கலை சந்தையில் வாழைக்காய் விலை உயர்வு


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேட்டை சந்தையில் வாழைக்காய் விலை உயர்ந்துள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். போதிய மழை பெய்யாத நிலையில் விளைச்சல் குறைந்து வாழைக்காய் விலை உயர்ந்துள்ளதாக வாழை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த சந்தையில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் வாழைக்காய்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் ’தேசிய வாழை விழா’ நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 98 நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாழை கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வாழை வகைகள் இடம்பெற்றுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS