தோப்புகரணம் போட்டு போராடிய விவசாயிகள்


தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தோப்புகரணம் போட்டும், நெல்மணிகளை வீசியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய காப்பீட்டு தொகையை கேட்டால் மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கை காண்பிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் இதனை குறிப்பிட்டு மத்திய, மாநில அரசுகள் உன்னால நான் கெட்டேன், என்‌னாலே நீ கெட்டாய் என்று கூறுவது போல் ஆட்சியர் முன் தோப்புகரணம் போட்டனர்.

இதனையடுத்து குறை தீர்ப்பு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் நெல்மணிகளை தரையில் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் வீச முடியாததால்‌ தரையில் வீசுவதாக வேதனையுடன் அவர்கள் கூறினர். மேலும் 6 ஆண்டுகளாக கர்நாடக அரசிடம் இருந்து நீர் பெற்று தராத மாநில அரசை கண்டித்தும் அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


 

POST COMMENTS VIEW COMMENTS