ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கூட விற்பனை ஆகாத நிலை:விவசாயி‌கள் கவலை


தக்காளி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்குக்கூட விற்பனை ஆகாததால் தோட்டத்திலேயே அழுகி வீணாகி வருவதாக தரு‌‌மபுரி மாவட்ட விவசாயி‌கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பென்னாகரம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி உள்ளிட்‌ட பகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு மேல் விற்பனையானதால், விவசாயிகள் அதிகளவில் தக்காளியை பயிரிட்டனர்.‌இந்நி‌லையில்‌ தக்காளியின் விலை வீழ்சியடைந்ததையடுத்து கொள்முதல் செய்‌ய யாரும் முன் வராததால், தோட்டத்திலேயே பறிக்காமல் ‌தக்காளிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்‌ளனர்‌.

POST COMMENTS VIEW COMMENTS