விவசாய கடன் தள்ளுபடி எப்போது? அமைச்சர் விளக்கம்


விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்கு முடிந்த பிறகுதான், கடன் தள்ளுபடி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக தி.மு.க மற்றும காங்கிரஸ் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்த பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதைக் குறிப்பிட்டார். அந்த வழக்கு முடிந்த பிறகுதான் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS