பொய்த்துப் போன தர்பூசணி விவசாயம்: கல்பாக்கம் விவசாயிகள் வேதனை


காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே தர்பூசணி விவ‌‌சாயம் பொய்த்து போய் விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 60 நாட்கள் அறுவடைக்காலத்தில், 50 நாட்கள் ஆகியும் இதுவரை சிறு பிஞ்சு கூட வராததால் விவசாயிகள் கலக்க‌டைந்துள்ளனர்.

பிஞ்சு விதைகள் வழங்கப்பட்டதால் அவை காய்க்காமல் போயிருக்கலாம் என்று கூறும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கி கடன் வாங்கி விவசாயம் மேற்கொண்டுள்ளதால் அதனை அடைக்க‌முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS