வறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிப்பு


திண்டுக்கல் மாவட்டம் ஜாதிகவுண்டன்பட்டி, எர்ணாபட்டி கிராமங்களில் வறட்சி காரணமாக திராட்சை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி‌கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் கிலோ வரை சாகுபடி செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு செடிகள் காய்ந்துள்ளதால் 3 ஆயிரம் கிலோ கூட சாகுபடி இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே திராட்சை விவசாயத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS