கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு


கிருஷ்ணகிரி அணை அதன் முழு கொள்ளவான 52 அடியை எட்டிய நிலையில் தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இரண்டாம் போக சாகுபடிக்காக நடவுப் பணிகளை முடித்துள்ள விவசாயிகள், அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஆகியோர் கிருஷ்ணகிரி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிட்டனர்.

அணையின் வலது மற்றும் இடது புறக்கால்வாய் மூலம் வினாடிக்கு 155 கன அடி வீதம் 110 நாட்களுக்கு சூழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இதன் மூலம் பெரியமுத்தூர், சின்னமுத்தூர், திம்மாபுரம், காவேரிப்பட்டினம், நெடுங்கல் உள்ளிட்ட 16 கிராம ஊராட்சிகளில் 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலம் பாசனம் பெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS