‘விலையில்லா ஆடுகள்’ திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு


 

விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தாக்கல் செய்தார். அதில், வறட்சி காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மழை பெய்தபின், ஆடு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை கால்நடை கணக்கெடுப்புப் பணி நடைபெறும் எனவும் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS