உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு


உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. உரங்கள் விலை அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த 18ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், டிராக்டர் உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
 

POST COMMENTS VIEW COMMENTS