திருச்சி லால்குடி அருகே கந்துவட்டியால் விவசாயி தற்கொலை?


திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயி கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

ஹரிபாபுவின் மனைவி ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் மணிகண்டன் என்பவரிடம், ஹரிபாபு 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அந்த பணத்திற்கான வட்டியையும், அசலையும் திருப்பிக் கொடுக்காததால் ஹரிபாபுவை, மணிகண்டன் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஹரிபாபு இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS