டிராக்டருக்கான கடைசி 2 தவணையை செலுத்தாத தஞ்சாவூர் விவசாயி மீது தாக்குதல்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்


தஞ்சை மாவட்டத்தில் டிராக்டருக்காக வாங்கிய கடன் தொகையில் கடைசி 2 தவணைகளை செலுத்தாத விவசாயி மீது நடந்துள்ள தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. விவசாயிக்கு அவரது டிராக்டரை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான போராட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டிராக்டரில் இருப்பவரை போலீசார் உதவியுடன் வலுக்கட்டாயமாக இழுத்து அடிக்கும் இந்த காட்சிகள் அரங்கேறிய இடம் தஞ்சை மாவட்டம் சோழவன்குடிகாடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் விவசாயப் பணிகளுக்காக தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விவசாயக்கடனுக்கான 8 தவணைகளில் இதுவரை 6 தவணைகளில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 140 ரூபாயை கட்டியிருப்பதாக கூறும் பாலன், ‌எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்து வழிமறித்து தாக்கியதாக கூறுகிறார்.

விவசாயிகளிடம் இருந்து கடன் தொகைக்காக சொத்துகளை பறிமுதல் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் தடையே உள்ள நிலையில், காவல்துறை உதவியோடு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, தாம் மிரட்டலுக்கும் ஆளானதாக கூறுகிறார் பாலன்

விவசாயி பாலன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தவில்லை என ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்னன் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தின் வழிமுறைகளின் படியே கடன் தவணை செலுத்தாத, விவசாயி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS