காவிரி மேலாண்மை வாரியம் உள்பட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி நீர்ப்பங்கீடு ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் , விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள‌யும் அவர்கள் வலியுறுத்தினர். இது தவிர, முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர். அனைத்து விவ‌சாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS