ஸ்ரீவைகுண்டம் அணையை முறையாக தூர்வார ஜி.கே.வாசன் வேண்டுகோள்


ஸ்ரீவைகுண்டம் அணையை முறையாக தூர்வாரி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவதற்கு தமிழக அரசு ‌நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஸ்ரீவைகுண்டம் அணையை முறையாக தூர்வார‌, அரசு ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மழைக்காலங்களில் வரும் நீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க, அணையை முழுமையாக தூர்வாரி தடுப்பணை கட்டவேண்டும் என ‌அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரி முறையாக பராமரித்தால் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS