விவசாயக் கடனை ரத்து ‌செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு


தேசிய வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்யும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்‌ளது.

நாடு முழுவதும் விவசாயக் கடன் ரத்து செய்யப்படுமா என்று சமாஜ்வாதி உறுப்பினர் நீரஜ் சேகர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்‌ அளித்த நிதித்துறை இணையமைச்சர், விவசாயக் கடனை ரத்‌து செய்யும் திட்டம் ‌தற்போது இல்லை என்று கூறினார். அதேவேளையில், குறுகிய காலப் பயிர்க்கடனுக்கான வட்டி ‌விகிதம் 7 சதவி‌‌கிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பேரிடர் பகுதிகளில் விவசாயக் கடனுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS