ரப்பர் மரங்களுக்கு சல்பர் பொடி தெளிப்பதை தடை செய்ய கோரி பொதுமக்கள் சத்தியாகிரகப் போராட்டம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களுக்கு சல்பர் பொடி தெளிப்பதை தடை செய்ய கோரி அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இலை உதிர்காலத்தில் ரப்பர் மரங்களின் இலைகள்‌ உதிர்ந்து, புதிய இலைகள் தளிரிடும் போது, மரங்களை இலை சுருட்டு நோய் தாக்குகிறது. இலைசுருட்டு நோயிலிருந்து ரப்பர் மரங்களை பாதுகாக்க, சல்பர் பொடி தெளிக்கப்படுகிறது.

ஆனால், சல்பர் பொடியால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதுதொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது.

இதையடுத்து, சல்பர் பொடி தூவக் கூடாது என அப்பகுதி விவசாயிகளுக்கு களியல் பேரூராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், அப்பகுதியில் சல்பர் பொடி தூவப்படுவதால், களியல், கடையால், சிற்றார், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS