இந்திய பாசுமதிக்கு புவிசார் குறியீடு வழங்கும் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது


இந்திய பாசுமதிக்கு புவிசார் குறியீடு வழங்குவது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்தியப் பிரதேச அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மேல்முறையீட்டு மனுவில், எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த பகுதிகளில் பாசுமதி விளைவிக்கப்படுகிறது என தெளிவான வரைபடத்தை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் விடுபட்டுள்ளதை கவனத்தில் கொள்ளாமல், அறிவுசார் சொத்துரிமை ஆணையம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மத்தியப் பிரதேசம் கோரியுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவொரு நடவடிக்கையிலும் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டது.

முன்னதாக, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசிக்கு 4 வாரத்துக்குள் புவிசார் குறியீட்டை வழங்க வேண்டும் என, அறிவுசார் சொத்துரிமை மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.

POST COMMENTS VIEW COMMENTS