ரப்பர் தோட்டங்களில் தூவப்படும் சல்ஃபர் பொடியால் பாதிப்பு


குமரி மாவட்டத்தில் தனியார் ரப்பர் தோட்டங்களில் சல்ஃபர் பொடி தூவப்படுவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயத்தை ஏராளமானோர் பிரதான தொழிலாக மேற்கொண்டுள்ளனர். தற்போது இலையுதிர் காலத்தையொட்டி, ரப்பர் மரங்களில் நோய் தொற்று ஏற்படுதை தடுக்க சல்பர் பொடி, மரங்களின் மேல் தூவப்படுகிறது.

தனியார் ரப்பர் தோட்டங்களில் சுமார் 120 அடி உயர மரங்களின் மேல் இயந்திரத்தின் உதவியுடன் சல்பர் பொடி தூவப்படுவதால், காற்றில் பறக்கும் அப்பொடி, அருகில் உள்ள களியல், கடையல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

மேலும், சல்ஃபர் தூவப்படுவது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஷத்தன்மை வாய்ந்த சல்ஃபர் பொடியால் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS