காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்கும் வழக்கு ஒத்திவைப்பு


காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பாறை எரிவாயு எடுப்பதற்கு எதிரான வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனம‌ன ஓ.என்.ஜி.சி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்க திட்டமிட்டதை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி, தொழில்நுட்ப வல்லுநர் நாகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.என்.ஜி.சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மற்ற எதிர் மனுதாரர்களான தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS