பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி விதைகள் வாங்கலாம்... விவசாயிகளுக்கு புதிய சலுகை


செல்லாதவை என அறிவிக்கப்பட்ட‌ 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விவசாயிகள் விதைகள் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய, மாநில விதை விற்பனை மையங்கள், மத்திய மாநில அரசுகளின் வேளாண் பல்கலைக்கழங்களின் விற்பனை மையங்களில் செல்லாத 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விவசாயிகள் விதைகள் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் மாநில விதைக் கழகம், பொதுத்துறை மையங்களிலும் 500 ரூபாய் நோட்டை கொடுத்து விவசாயிகள் தேவையான விதைகள் வாங்கிக்கொள்ளலாம் என்றும்‌ கூறப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்து செல்லாத நோட்டுகளை கொடுத்து விதைகள் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள், விவசாயிகளிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகளுக்கு இந்த சலுகையை அளித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS