டெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். நீரின்றி பயிர்கள் வாடுவதைப் பார்த்து மயங்கி விழுந்து ‌அவர் மரணமடைந்துள்ளார்.

கீழ்வேளூர் அருகே கீழகாவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நவநீதம். இவர், தனது நிலத்தில் நெற்பயிர் பயிரிட்டுள்ளார். ஆனால் தற்போது நீரின்றி பயிர்கள் கருகி வந்துள்ளன. இதனால், வேதனையில் இருந்த நவநீதம் இன்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது, பயிர்கள் கருகி இருந்தைக் கண்டு வேதனை அடைந்த அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு போதிய பணமில்லாத வேதனையில்தான் நவநீதம் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

தஞ்சாவூரில் ஒரு விவசாயி மற்றும், திருவாரூரில் 2 விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS