கரும்புக்கான நிலுவைத் தொகை : அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் விவசாயிகள் முறையீடு


சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி கரும்பு விவசாயிகள் தமிழக அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 300 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2013-14 முதல் 2015-16ம் ஆண்டுவரை மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை சர்க்கரை ஆலைகள் தரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS