விவசாயப் பயன்பாட்டுக்காக ஆளில்லா ஹெலிகாப்டர்: யமஹா நிறுவனம் வடிவமைப்பு


விவசாயப் பயன்பாட்டுக்கா ’ஃபேசர் ஆர்’ எனும் பெயரில் புதிய ஆளில்லா ஹெலிகாப்டர்களை ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

யமஹா நிறுவனத் தயாரிப்புகளிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்த வகை ஆளில்லா ஹெலிகாப்டர்கள் மூலம் 32 லிட்டர் பயிர் தெளிப்பு மருந்துகளை எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தவகை ஹெலிகாப்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் 4 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களுக்கு மருந்துகளைத் தெளிக்க முடியும் என்று யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் இந்த ஆளில்லா ஹெலிகாப்டர்கள், டோக்கியோவில் நடக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS