மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்: தலைவர்கள் உறுதி


மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை தேர்வு செய்தால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என அதன் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

சிவகங்‌கை மாவட்டம் திருப்பத்தூரில் மக்கள்நலக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை தேர்வு செய்தால், ஊழல், மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்று தலைவர்கள் உறுதியளித்தனர். இதேபோல், விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும், வேலையில்லாத் திண்டாட்டம் போக்கப்படும் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளையும் அவர்கள் அளித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS