கடலூர் விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி


பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகளுடன் வரும் 26-ல் கலந்துரையாடுகிறார்.

சுமார் ஒருமணி நேரம் நடக்கும் இந்த கலந்துரையாடலில் தமிழகத்தின் கடலூர், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், அசாமின் ஜோர்ஹர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு, ஹிமாச்சலப்பிரதேசத்தின் பலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

மேலும், இந்த கலந்துரையாடலின் போது சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் சிலவகையான மலர்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்களையும் பிரதமர் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் விவசாயிகளுக்கு வெட்டி வேர் எனப்படும் நறுமணப் பயிரின் புதிய வகை வேரை பிரதமர் மோடி வழங்குகிறார். இந்த கலந்துரையாடலின் போது இரு வகையான மலர் வகைகளையும், பீதாம்பர் எனும் பெயருடைய புதியவகை மஞ்சள் செடி வகையினையும் அவர் வெளியிட இருக்கிறார். இந்த கலந்துரையாடல் குறித்து பேசிய பலம்பூர் இமாலய உயிர்வள ஆதார தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் சஞ்சய் குமார், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையிலான புதிய பயிர்வகைகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS