பயிர்கள் கருகியதால் சோகம்: விஷம் அருந்தி உயிரைவிட்ட விவசாயி


போதிய நீர் இல்லாமல் வெங்காயப்பயிர்கள் கருகியதால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சங்கரமூர்த்திபட்டியில் வசித்து வந்த விவசாயி மகாராஜன் தனக்கு உள்ள 5 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கரில் 3 லட்சம் ரூபாய் செல்வில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளார்.

முந்தைய சாகுடியில் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தற்போது கிணறு வற்றி வெங்காயப்பயிர்கள் கருகி உள்ளன. இதனால் மனமுடைந்த விவசாயி மகாராஜன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி மகாராஜன் இன்று உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS