காவிரி பிரச்னையால் போக்குவரத்து முடக்கம்: மலர் ஏற்றுமதி பாதிப்பு.. ஓசூர் விவசாயிகள் கலக்கம்


காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக - தமிழகம் இடையிலான போக்குவரத்து இன்னமும் சீரடையவில்லை. இதனால் ஓசூரில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோஜா பூக்கள் தேக்‌கமடைந்துள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சிவா, ரோஜா சாகுபடி செய்பவர் தமிழகத்தில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்வதில் கிருஷ்ணகிரி மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. கடல்மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளதாலும் குறைந்த தட்பவெப்பநிலை நிலவுவதாலும் ஒசூர் பகுதியில் ரோஜா உள்ளிட்ட வண்ணமிகு மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 5 ஆயிரம் ஏக்கரில் திறந்த வெளியிலும் பசுமை குடில்கள் அமைத்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் மலர்கள் கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காவிரி விவகாரத்தில் கடந்த 15 நாட்களாக கர்நாடக தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன.

போக்குவரத்து பாதிப்பால் சுமார் ரூ 10 கோடி வரையில் ஒசூர் பகுதியில் மலர்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த நிலை நீடித்தால் விவசாய தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்கின்றனர் மலர் ஏற்றுமதியாளர்கள்.

பண்டிகை கால‌ங்கள் நெருங்கும் நிலையில் தொடர்ந்து இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டால் பூக்கள் ஏற்றுமதியாளர்களும் அதை சார்ந்துள்ள விவசாயிகளும் பெரும் நஷ்டம் அடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது

POST COMMENTS VIEW COMMENTS